மட்டக்களப்பு மாங்கேணி பிறேரா பிறயர் ஹவுஸ் கிறிஸ்த்தவ சபையினரினால் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று (28) ஞாயிற்றுக் கிழமை மாலை மௌன அஞ்சலியும் விசேட பிரார்த்தனையும் இடமபெற்றது.
பாசிக்குடா நாகதம்பிரான் வீதியில் பாஸ்ரர் சிறிக்காந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வி.என்.நாகரத்ன,இன்ஸ்பெக்ரர் டி.பி.கே. விஜயந்த மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தமது மென அஞ்சலியை செலுத்தினார்கள்.