(காரைதீவு நிருபர் சகா)
வாசிப்புமாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயத்திலுள்ள பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்தில்’புது மையை நோக்கி’ என்ற வாசிப்புமாத சிறப்புவேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர்முதலாந்திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் இவ்வேலைத்திட்டத்தை நாவிதன்வெளிக்கோட்ட பதில்கோட்டக்கல்விப் பணிப்பாளரும் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளருமான செல்வி வி.நிதர்சினி முன்னெடுத்துள்ளார்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் ஆலோசனைக்கமைவாக த்திட்டத்திற்கு உலகதரிசனநிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
வாசிப்புமாதமான அக்டோபர்மாதத்தில் சிறார்களை வாசிப்பதற்கும் புதுமையைஅனுபவிப்பதற்கும் நூலகங்களை புனருத்தாரணம்செய்வதற்குமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இது தொடர்பான பூரண விளக்கத்தையும் அறிவுறுத்தல்களையும் பணிப்பாளர் வி.நிதர்சினி கோட்டத்திலுள்ள சகல ஆசிரியர்களுக்கும் அறிவித்துள்ளார்.
வாசிப்புமாதம் தொடர்பான பதாதையை பாடசாலைநுழைவாயிலில் காட்சிப்படுத்தல் அக்டோபர் 1 – 5ஆம் திகதி வரை பாடப்புத்தகங்கள் தவிர 5நூல்களையாவது வாசிக்கச்செய்தல் அக். 8 மற்றும் 9ஆம் திகதிகளில் தாம் வாசித்த நூல்களின் விபரத்தை மாணவர் வகுப்பறையில் சமர்ப்பிப்பர்.
அக்.10ஆம் திகதி சிறப்பான வாசித்தலை மேற்கொண்ட மாணவருக்கு பரிசுகள் வழங்கல் அக்.09 – 23 வரை நூலகங்களுக்கு டிஅங்கத்துவர்கள் சேர்த்தல் நூலக புனருத்தாரணம்செய்தல் அக்.24 – 29 வரை சிறந்த நூலகங்களை தெரிவுசெய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.