மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் இன்று (15) பி.ப. 3 மணியளவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல்தர வகுப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நீண்டகால சேவை அனுபவத்தினைக் கொணடவர்.
கிழக்கு மாகாண ஆழுனரின் நியமனத்திற்கமைய இன்று காலை நடராஜா சிவலிங்கம் மாநகர ஆணையாளராக கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிருவாக நியமன மாற்றத்தினால் நடராஜா சிவலிங்கத்தின் ஆணையாளர் நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் மாணிக்கவாசகர் தயாபரன் மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஒரே நாளில் இரு ஆணையாளர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றமை விசேட அம்சமாக பார்க்கப்படுகின்றது.
மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போது மாநகர பிரதி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பெரும் வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.