மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலைக்கு ஐரோப்பாவாழ் தமிழ் சமூகத்தின் ஆதரவும்

மூடப்படும் நிலையில் உள்ள நரிப்புல் தோட்டப் பிரதேச பாடசாலை மாணவர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய வாழ் சமூகத்தினால் உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது

புலம்பெயர் ஐரோப்பாவாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனைமேற்;கு பிதேசசெயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத்தோட்டம்,மகிழவட்டவான் நெல்லூர். விழாவட்டவான் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக,மாணவர்களின் எண்ணிக்கைகுறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேசதமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும்  நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல்லுத்தோட்டம்,மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2 வது குழந்தைகளுக்கு மேல்பெற்றெடுத்த தாய்மார்களுக்குதலாரூபா 10,000.00 வும்; பிள்ளைபராமரிப்பிற்காக 18 வயதுவரைமாதம் தோறும ;தலாரூபா 1,000.00 வும் வழங்கிவைக்கப்பட்டுவருகிறத.

இத்திட்டமானது இரண்டுவருடங்களைக் கடந்தநிலையில் பலபாராட்டுதல்களையும் ,அதிகப்படியானஆதரவையும் பெற்றுவந்துள்ளமையால் இன்னும் வலுவூட்டப்பட்டநிலைமையில்  22.07.2018(ஞாயிற்றுக் கிழமை) நரிப்புல்லுத்தோட்டம்,மகிழவட்டவான் கிராமங்களில் மேலும் 2 வது குழந்தைகளுக்குமேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலாரூபா 10,000.00 நான்குகுடுப்பங்களுக்குவழங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 51 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டதையும் இத்திட்டம்வெற்றியளித்துவருவதையும்பங்கேற்கின்றபுலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்திற்குதாபகர் சுவீஸ் வாழ் திரு.செ.அமிர்தலிங்கம் நன்றிச் செய்தியையும்தெரிவித்தார்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் மண்முனைமேற்கு திரு. க.சத்தியநாதன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்; இவ் வலயத்தில்  தரம் 01இற்கான மாணவர்கள்அனுமதி இல்லாதநிலைமையில் இவ்வருடம் இரண்டு பாடசாலைகள் மூடப்படவுள்ள தாகவும் வருத்தம் தெரிவித்தார்.

கௌரவஅதிதிகளாகதிரு.எஸ்..மகேந்திகுமார் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ,வலயக் கல்விப் பணிமனை மண்முனைமேற்குவலயம் திரு.க.ஹரிகரராஜ் வலயக் கல்விப் பணிமனை மண்முனைமேற்கு வலயம் ஆகியோர் தங்கள் வலயகல்வி அபிவிருத்திக்கு இத்திட்டம் மேலும் வலுவூட்டுவதாகவும் மேலும் பலகிராமங்களை இத்திட்டத்தினுள் இணைத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர் மேலும் சமூக ஆர்வலர்கள் கிராமஅபிவித்திச் சங்கத் தலைவர்கள் கலந்துசிறப்பித்தனர்.

????????????????

Related posts