2019-ல் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு

2019 ஆம் ஆண்டு வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலக அலுவலகத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒரு சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருட்கள் போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு அவற்றை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்

Related posts