35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு எதிர்காலத்தில் பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கு தடை விதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டி தொழிலை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அது மேலும் சரிவடையும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டி செலுத்துவதை தடை செய்தால் அதற்கு எதிராக கடும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அனைத்திலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.