தமிழ் மக்களினது உரிமைப்போராட்டத்தினை தடுத்து நிறுத்த கொடிய யுத்தத்தை ஆரம்பித்து தமிழ் மக்களை ஈவிரக்கமற்று கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்த கோட்டபய ராஜபக்ஷவை ஒருபோது எமது மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதியின் அமைப்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமதாசவை ஆதரித்து ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதியின் அமைப்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்தியின் ஏற்பாட்டில் துறைநீலாவணைக்கிராமத்தில் தேர்தல் அலுவலகம் 10 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.
துறைநீலாவணைக் கிராமத்தின் ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்களது ஒழுங்கமைப்பில் ஓய்வுபெற்ற கால்நடை வைத்தியர் குமாரசாமி அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களது கொள்கைப் பிரகடனமும் மக்களிடம் கையளிக்கப்பட்டது
அவர் மேலும் பேசுகையில் தமிழ் மக்களினது 70 வருடப் போராட்டத்தில் 30 வருடம் ஆயுதப்போராட்டம் 40 வருடம் அகிம்சைப்போராட்டம் நடாத்தி தமிழ் மக்களது உரிமை கிடைக்க இருந்த தருணத்தில் கொடி யுத்தத்தினை மேற்கொண்டு தமிழ் மக்களை வாட்டியது ராஜபக்ஷ குடும்பம் என்பதனை மறக்கமாட்டார்கள்.
இறுதி யுத்தத்தின் போது மக்கள் உணவு,உறகக்கம்,மருத்துவம் எதுவுமின்றி கதறினார்கள் அவர்களை வெளியில் செல்லாது அனைத்தையும் தடுத்து நிறுத்தியபோது உலக நாடுகள்கண்டித்ததுஅத்தோடு வண்னிப்பகுதியில் இருந்து சேவையாற்றிய செஞ்சிலுவைச்சங்கம் உட்பட சகல தொண்டு நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேற்றி பாரிய யுத்தத்தினை நடாத்தி மக்களை கொன்று குவித்த சூத்திரதாரி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவதற்கு அவருக்கு வெட்கமில்லையா?
இந்த நாட்டில் ஜனநாயகம் மலரவேண்டும் அது மலர்வதற்கு சஜித்பிரமதாசவை நாம் அனைவரும் ஆதரிக்வேண்டியுள்ளோம் அப்போதுதான் வெள்ளைவேன் கலாசாரம் கொலை கடத்தல் போன்றவை இடம்பெறாது நிம்மதியாக வாழமுடியும்.அவர்களது ஆட்சியில் பல பத்திரிகை ஆசிரியர்கள்,பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர் கொலைசெய்யப்பட்டனர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் நிலை உருவாகி இருந்தது.
இன்று பார்க்கின்ற போது ராஜபக்ச கூட்டங்களுடன் இரண்டுபேர் பின்னால் திரிகின்றனர் அதாவது பிள்ளையான்,கருணா போன்ற இருவரும் ராஜபக்ஷ குடும்பத்தின் கூலிப்படையாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்
இவர்கள் என்ன நோக்கத்திற்காக தமிழர்கள் போராடினார்களோ அந்தப் போராட்டங்களை உதாசினப்படுதிவிட்டு கூலிப்படையாக அவர்களின் பின்னால் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் யாராக இருந்தாலும் தன்மானமுள்ள எந்தத் தமிழரும் வாக்களிக்கமாட்டார்கள் அவ்வாறு வாக்களிக்கின்ற தமிழர்கள் உரிமைப் போராட்டத்திலும் இறுதி யுத்தத்திலும் கொல்லப்பட்ட ஆத்மாக்கள் ஒவ்வொன்றுக்கும்செய்யும் பெரும் துரோகமாகும்.
கடந்த தேர்தலில்; ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வதிகாரியாக செயற்பட்ட மகிந்தராஜபக்ஷவை எமது மக்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் அதேபோன்று இத்தேர்தலிலும் சஜித் பிரமதாசாவிற்குவாக்களித்து அவரை வெற்ற்pபெறச்செய்வதோடு கோட்டபாஜராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் வேலையை எமது மக்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்