வெல்லாவெளி திக்கோடையில் ஞாயிற்றுக்கிழமை(14)மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டமானது முன்னாள் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ச.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசியகட்சியில் முதன்முதலாக 8தமிழர்கள் போட்டியிடுகின்றோம்.நாங்கள் தேசிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மொட்டுச் சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.எங்கள் கட்சியானது தமிழ்மக்களின் நலன் கருதிதான் அரசியலில் பயணிக்கின்றது.தமிழ்மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்வதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் காணமுடியாது.தமிழ்மக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருநாளும் கைவிடாது.எனவே தமிழ்மக்கள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மொட்டுச்சின்னத்தை ஆதரிக்கவும் எனவும் கேட்டுக்கொண்டதோடு எனது விருப்பு இலக்கத்துக்கு நேரே புள்ளடியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் ஜனாதிபதி கோத்தபாய,பிரதமர் மஹிந்த ராஜபக்வின் கரங்களை பலப்படுத்தி அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்கு மொட்டுச்சின்னத்துக்கு புள்ளடியிட்டு மாற்றமுள்ள தமிழ்பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்பி காட்டுங்கள்.தமிழ்மக்களின் அபிவிருத்தி அபிலாஷைகள் தானாகவே காலடிக்கு வந்துசேர்ந்திடும்.நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் ஆவலோடு இருக்கின்றார்கள்.இதனை தமிழ்மக்கள் விழிப்புடன் உணர்ந்துகொண்டு மொட்டுச் சின்னத்தை பலப்படுத்துங்கள்.
இன்று தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகளையோ அல்லது அவர்கள் வாழ்வதற்குரிய பொருளாதார திட்டமிடல்களையோ தமிழ்தலைமைகள் சிறிதளவும் நிறைவேற்றவில்லை.மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் மொட்டின் வெற்றியை தமிழ்மக்கள் பலமான வெற்றியாக மாற்றவேண்டும்.இன்று மாவட்டத்தில் படித்த இளைஞர்,யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்களின் வேதனை யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் இரட்டிப்பாக காணப்படுகின்றது.இவ்வாறானவர்களு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் வாக்குகள் தமிழ்மக்களின் வாக்குகளாகும்.முஸ்லிம்கள் 95 வீதம் வாக்களிப்பார்கள்.தமிழர்கள் குறைவாகத்தான் வாக்களிப்பார்கள்.இவற்றில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் அழிக்கப்படுகின்றது.இருபத்தையா
வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்கும்.அமையவிருக்கின்ற அரசாங்கத்தினால் மட்டக்களப்பு-வாகரையில் பசுமைப்புரட்சி எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்மூ