தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் பீடத்திற்கு பாராட்டு

சுதா

 
நாவிதன்வெளிப் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரதி நிதித்துவம் புத்தி ஜீவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் பீடத்திற்கு பாராட்டு
 
அப்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவுக்கு புத்தி ஜீவிகள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
 
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் இழக்கப் பட்டிருந்தன.இதனால் தமிழ் மக்கள் மனங்களில் சோகமான நிலை காணப்பட்டிந்தன.இந் நிலையில் கட்சி உயர்பீடம் நிதானமாகச் செயற்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் ஊடாக நல்லதொரு மக்கள் சேவகனை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்திருக்கின்றமை தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற நாவிதன்வெளிப் பிரதேசத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள வரப்பிரசாதமாகும்.
 
அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் வாக்கினை தீய சக்திகள் சிதறடித்து தமிழ்ப் பிரதி நிதித்துவத்தினை இல்லாமல் செய்த செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி வழங்கி இருக்கின்றமை வரலாற்று பதிவாகும்.
 
கடந்த யுத்த சூழ்நிலையில் அதிகளவான மனித உயிர்கள் மாத்திரமல்லாது பொருளாதாரம் உட்கட்டமைப்பினையும் இழந்த பிரதேசம் நாவிதன்வெளிப் பிரதேசத்திற்கு வரலாற்றில் முதற் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிடைக்கப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
 
இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த காலத்தினை விடவும் அதிகளவான ஆசனங்களை இழந்த நிலையில் அம்பாறை தமிழ் மக்களை மறந்து விட வில்லை தமிழ்த் தேசியத்தினை காக்கும் குரலாக இன்று வரைக்கும் செயற்படுகின்றமை பாராட்டத்தக்கது என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்

Related posts