மதத் தலங்களின் உற்சவங்கள் ஆரம்பமானதால் ஒளிர்வு பெறும் மட்டு நகர வீதிகள்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மங்களராம விகாரையில் பொசன் உற்சவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நலன் கருதி நகரின் 20 வட்டாரங்களிலும் விதிகளுக்கு மின் விழக்குப் பொருத்தி ஒளியூட்டுவதோடு சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவனின் சிந்தனைக்கமைவாக தூய்மையான ஒளி நிறைந்த பசுமையான நகரம் எனும் தொனிப்பொருளில் மாநகர அங்கத்தினர்களின் சிபார்சின் பெயரில் வீதிகளுக்கு ஒளியூட்டும் வேலைகள், வீதிகள் மற்றும் வடிகான்களை துப்பரவு செய்யும் சேவைகள் குறித்த வேலைப்பகுதியினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் அடிப்படையில் அரசடி 10 ஆம் வட்டாரத்தின் தாமரைக்கேணி மற்றும் கோட்டைமுனை பிரதேசங்களில் மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் சிபார்சுக்கு அமைவாக இன்று (11) வீதிகளில் எரிந்த நிலையில் காணப்பட்ட மின்குமிழ்கள் மாற்றப்பட்டதோடு தேவையான இடங்களுக்கு புதிய மின்விளக்கு கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts