1000ருபா பெறுமதியான உலருணவுப்பொதியைப் மக்கள் முண்டியடிப்பு.
கிழக்குமாகாண கூட்டுறவு அபிவிருத்தித்திணைக்களத்தின் ஏற்பாட்டில், காரைதீவு ப.நோ.கூ.சங்கத்தில் பழையவிலையில் அங்கர் பால்மா விநியோகம் இடம்பெற்றுவருகிறது.
நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில் கூட்டுறவு இராஜாங்கஅமைச்சர் லசந்த அழகியவன்ன மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மத்தியஅரசு கூட்டுறவுஅபிவிருத்தித்திணைக்களத்துடன் இணைந்து மக்களுக்கு பழையவிலையில் பால்மாவை விநியோகிக்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
அந்தவகையில்,கிழக்கு மாகாணகூட்டுறவுஅபிவிருத்தி ஆணையாளர் எ.எல்.எம்.அஸ்மி கிழக்குமாகாண மக்களுக்கென 2கோடி ருபாவுக்கு அங்கர் பால்மா கொள்வனவுசெய்யப்பட்டு சகல கூட்டுறவுச்சங்கங்களினூடாகவும் விநியோகிக்க துரித நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன்படி 400கிறாம் அங்கர் பால்மா 380ருபாவுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது.வெளியில் தற்போதையவிலை 480ருபா என்பது குறிப்பிடத்தக்கது.
காரைதீவு ப.நேர்.கூ.சங்கத்திற்கு 1340பக்கட் 400கிறாம் அங்கர் பால்மாவும், 53பக்கட் 1கிலோ அங்கர் பால்மா பக்கட்டும் கொள்வனவு செய்ததாக ப.நோ.கூ.சங்கத்தலைவர் வை.கோபிகாந் தெரிவித்தார்.
காரைதீவு ப.நோ.கூ.சங்கத்தலைவரும் பட்டதாரி ஆசிரியருமான வை.கோபிகாந் சமகாலசூழ்நிலையை கருத்திற்கொண்டு, 3கிலோ சீனி, 400கிறாம் அங்கர் பால்மா, 200கிறாம் தேயிலை, 1 உப்பு பக்கட் அடங்கிய 1000ருபா பெறுமதியான உலருணவுப்பொதியை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்றுள்ளது.இந்த உலருணவுப்பொதியைப் பெற மக்கள் முண்டியடித்ததைக்காணக்கூடியதாயிருந்தது. இரண்டுதினங்களில் 1340 பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை, அங்கு சீனி 1கிலோ 125ருபாவுக்கும் அங்கு விற்பனைசெய்யப்படுகிறது. இந்நடைமுறை கடந்த 4மாதகாலமாக நடைபெற்றுவருகிறது.இதுவரை 150 சாக்கு சீனி விற்கப்பட்டதாக ப.நோ.கூ.சங்க பொதுமுகாமையாளர் லியோராஜ் ரமேஸ்குமார் தெரிவித்தார்.
.இத்தகைய சலுகைவிலை மானியத்தை ப.நோ.கூ.சங்கங்களினூடாக தொடர்ந்து மேலும் பல அத்தியாவசிய பொருட்களுடன் விநியோகிக்க அமைச்சர் லசந்தஅழகியவன்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.