மனித உரிமையில் முதுமானிப்பட்டம் பெற்றார் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிறுவனத்தினூடாக பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மனித உரிமை முதுமானிப்பட்டத்தினை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் பெற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக உருகுண பல்கலைக்கழத்தில் சமாதானமும் அபிவிருத்தியும் தொடர்பாக முதுமானிப் பட்டத்தினை நிறைவு செய்துள்ளதோடு, யுனிசெப் நிறுவனத்தின் புலமைப்பரிசில் ஊடாக குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பட்ட பின்படிப்பு பட்டத்தினையும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.

மேலும் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிறுவனத்தினூடாக சர்வதேச கற்கை நெறி தொடர்பாக பட்ட பின்படிப்பினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வியியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பட்ட பின்படிப்பினையும் நிறைவு செய்துள்ளார். அமெரிக்கா இல்னஸ் பல்கலைக்கழத்தினூடாக புலமைப்பரிசில் பெற்று இலங்கை நிருவாக நிறுவனத்தில் ஒரு வருட நல்லாராட்சியும், தலைமைத்துவமும் தொடர்பான டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.

இவர் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், மட்.மத்திய கல்லூரி, மட்.சிவாநந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும், சிவாநந்தா தேசிய பாடசாலையின் பயிற்றப்பட்ட விஞ்ஞான பட்டதாரியுமாவார். இவர் பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் கல்விப் பொறுப்பாளராக இருந்துள்ளார். இவர் காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் மனோரஞ்சிதம் ஆகியோரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts