In celebration of the birthday of Ganapathipillai Thurai Nayagam, the treasurer of the Swiss Udayam Eastern Organization, an event was held today to construct and hand over a new house to a homeless family living in the village of Ammandanaveli, located in the Vakarai Divisional Secretariat area, with the personal financial assistance of Thurai Nayagam (1.5 million) under the auspices of Swiss Udayam.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சுவிஸ் உதயம் அனுசரனையில் துரைநாயகம் அவர்களின் சொந்த நிதி உதவியில்(1.5mn) வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அம்மந்தனாவெளி கிராமத்தில் வசிக்கும் வீடற்ற குடும்பத்திற்கு புதிய வீடு அமைத்து கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
In this event, Thurai Nayagam and his wife Nithivadhani, along with Mariyathas Devaraja (Palan), a member of the parent organization’s executive committee visiting from Switzerland, and his family, as well as members of the Eastern branch’s executive committee, were present.
இந்நிகழ்வில் துரைநாயகம் மற்றும் அவரது மனைவி நிதிவதனி மற்றும் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தாய்ச்சங்க நிருவாக சபை உறுப்பினர் மரியதாஸ் தேவராஜா( பாலன்) மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் கிழக்கு கிளை நிருவாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.