Today, an event was held to provide drinking water supply to two families in the very poor condition of Kadiraveli and Ambanthanaveli areas, which fall under the Vakarai Divisional Secretariat of Batticaloa District, facing difficulties in accessing clean drinking water.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவு வறிய நிலையில் உள்ள குடிநீரைப் பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட இரு குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
Based on the request made to the Swiss Uthayam East organization, these water projects have been established and provided. Financial assistance for this water project was provided by T. Krubanand and his wife, members of the Tamil Youth Organization, and the son of businessman K. Thurainayagam from Switzerland.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் க.துரைநாயகத்தின் மகனும் தாய்ச்சங்க உறுப்பினர் T.கிருபானந்த்-றுஜோனி தம்பதியினரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
This event was held under the leadership of K. Pakkiyaraja, the secretary of the Swiss Uthayam East organization. The event was attended by Krubanand and his wife, along with many others, including the deputy secretary of the Swiss Sunrise Uthayam, Nadanasabesan, and the treasurer, Harusraj.
இந்த நிகழ்வு சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் செயலாளர் க.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருபானந்த்-றுஜோனி தம்பதியினர் கலந்துகொண்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் பொருளாளர் ஹருஸ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
During this event, the drinking water supply projects were handed over to the beneficiaries. Similarly, for the benefit of students in the Kadiraveli area, a set of learning materials was also provided by Krubanand and his wife to the management of the Kadiraveli Pathirakali Amman Temple.
இதன்போது குடிநீர் விநியோக திட்டங்கள் பயனாளிகளின் கைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இதேபோன்று கதிரவெளி பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் கிருபானந்த்-றுஜோனி தம்பதியினரால் கதிரவெளி பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.