கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதனால் நம்மையும் நாட்டையும் காப்பாற்றலாம்! என்கிறார் விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்டர் விஜி திருக்குமார்.

கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதனால் , நமக்கு தொற்று ஏற்படுகின்ற போது 100% தடுக்காவிடிலும் 60%- 90% குறைக்கின்றது .அத்துடன் தொற்றின் வீரியத்தை அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ள உதவுகிறது.சில வேளைகளில் தொற்று ஏற்பட்டாலும் அது வெளிக்காட்டுப்படாமல் கடந்து போகிறது.எனவே தடுப்பூசி ஏற்றப்படுவது அவசியமாகும்.
 
இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும்,   மட்.போதனா வைத்தியசாலையின்  விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:

உலக நாடுகள் அனைத்தும் இவ் கொரனா தொற்றுக்காரணமாக பாரிய விளைவுகளை எதி்ர்நோக்கியுள்ளன.அவற்றை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்குரிய சாத்தியமான வழிமுறைகளில் கையான்டுவருவதுடன் அவற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளன.
 
இவற்றின் விளைவாக உருவாகிய ஒன்றே கொரனா தடுப்பூசியாகும்.ஒவ்வொரு நாடும் தங்களின் விஞ்ஞானிகளின் உதவியுடன் வெவ்வேறு பெயர்களில் மாறுபட்ட கட்டமைப்புகள் உள்ளடங்கியதாக இவ் தடுப்பூசிகளை தயாரிக்கின்றன.அவற்றின் செயல் திறன் 60%-90%வரை காணப்படுகின்றன.
 
இத் தடுப்பூசிகளின் பொதுவான இயல்புகள் அல்லது தொழில்பாடானதுஇநமக்கு தொற்று ஏற்படுகின்ற போது 100மூ தடுக்காவிடிலும் ஏற்கனவே கூறியது போல 60மூ-90மூ குறைக்கின்றது அத்துடன் தொற்றின் வீரியத்தை அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ள உதவுகிறதுஇசில வேளைகளில் தொற்று ஏற்பட்டாலும் அது வெளிக்காட்டுப்படாமல் கடந்து போகிறது.

நம்மில் சிலருக்குள்ள பயம் அல்லது சந்தேகம் இவ் தடுப்பூசியினால் ஏதாவது பாரிய பக்க விளைவுகள் ஏற்படுமோ என்பதாகும்.இது தேவையில்லாத ஒரு சந்தேகமாகும்.நாம் எடுக்கும் மருந்து மாத்திரைகளுக்கு எவ்வாறு சில விளைவுகள் இருக்கின்றதோ அதே போலவே இத் தடுப்பூசிகளை பொறுத்து சிலருக்கு காய்ச்சல் தலையிடி உடல் வலி ,மிக மிக குறைவானவர்களுக்கு அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன.இவற்றை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளதேவையில்லை.

நம் எல்லோருக்கும் தெரியும் நாம் வளர்ச்சியடைந்து வரும் நாடு. அதனால் நமக்கு நட்பு நாடுகளின் உதவியுடன் இவ் தடுப்பூசிகளை பெற்று முன்னுரிமை அடிப்படையில் ஆரம்பத்தில் சுகாதார துறையினருக்கும் பிறகு மக்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்பு 30-60 வயது உள்ளவர்களுக்கும் அடுத்த கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வழங்கப்படுகின்றது.இதன் அடுத்த கட்டமாக 12-18 வயதுள்ளவர்களுக்கு Pfizer தடுப்பூசி வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமக்கு கிடைத்த இலவச கல்வி ,இலவச சுகாதாரம் அவற்றின் ஒரு பகுதியாக எமக்கு  பெறுமதியான தடுப்பூசிகளை எமது அரசாங்கம் இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கிறது.அவற்றை சிறந்த முறையில் நாம் எல்லோரும் எடுத்துக் கொள்வதானால் இவ் கொடிய கொரனா தொற்றிலிருந்து மீண்டு வராலாம்.

Related posts