11.10.2019 சம்பளஆணைக்குழுவினருக்கும், கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அவர் சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்கையில்-
இதுவரை அதிபர்,ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு எதுவும் இல்லை என கூறிவந்தவர்கள்,
அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாடு உள்ளதாக வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் இடைக்கால சம்பள திட்டம் தயாரிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொண்டமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கமைய அந்த இடைக்கால சம்பள திட்டத்தை தயாரித்து – அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும் என உறுதியளித்துள்ளனர்.
முழு சம்பள முரண்பாட்டையும் நீக்க புதிய ஆணைக்குழுவை உருவாக்கி அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதாகவும் இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.