மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன.

எனவே, சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலரோடோ மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியலாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இயுஜின்ஜென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் நாம் தற்போது தினமும் பயன்படுத்து பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது.

அதிக உறுதி வாய்ந்தது. வளையும் தன்மை கொண்டது. வெப்பத்தை தாங்க கூடியது. இந்த பிளாஸ்டிக்கை மீண்டும் மீண்டும் பல தடவை பயன்படுத்த முடியும்.

தற்போதைய பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய நச்சு தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் இதில் அத்தகைய நடவடிக்கைகள் தேவை இல்லை.

புதிய வகை பிளாஸ்டிக்கில் பாலிமர் கலக்கப்பட்டுள்ளது. அதனால் அதை சாதாரண மறு சுழற்சி மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய முடியும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பற்றாக் குறை தீரும்.

Related posts