நூருள் ஹுதா உமர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு நாடெங்கும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருப்பதினை அனைவரும் அறிவோம்.
இதனடிப்படையில் 2020.03.22 ஆம் திகதி அக்கரைப்பற்று பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸீக், சுகாதார வைத்திய அதிகாரி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள் சங்க பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கூடி மக்களின் நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டது.