அன்னை பூபதியின் 31 ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் உள்ள அவரது சமாதியில் 19 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது
இந்திய இராணுவத்தின் வல்லாதக்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் பங்குனி மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்க ஆலயத்தின் தனது சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து 1988.04.19 ஆம் திகதி ஒரு மாத காலங்களின் பின்னர் இறைபதம் அடைந்தார்.
ஈழ வரலாற்றில் முதல் பெண் நாட்டுப்பற்றாளராகவும் இந்திய இராணுவத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியவராக அவர் திகழ்ந்தார்.
இன்றைய தினம் அவரது நினைவகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன அந்தவகையில் தேசத்தின் வேர்கள் முன்னாள் போராளிகளின் அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமான நடைபெற்றது.
இதன் போது அன்னை பூபதி அம்மாவின் உறவினர்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு அகவணக்கம் செலுத்தி நினைவுகூறியமை குறிப்பிடத்தக்கது.