பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.இவ்வாறு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைக்கு சனிக்கிழமை(9) வருகைதந்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் திருக்கரங்களால் களுதாவளை சுயம்புலிங்க ஆலயத்திற்கான காபட்வீதியை நாடாவெட்டி திறந்து வைப்பதையும்,தேசிய பாடசாலைக்கான நினைவுப் படிவத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இதன்போது 75 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணத்தொகுதி,வகுப்பறை உள்ளிட்ட பாடசாலை உட்கட்டமைப்பு வசதிக்கான அடிக்கல் நாட்டப்படுவதையும்,மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை,வலயக்கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளையும் படத்தில் காணலாம்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...