அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அவர்களால்அம்பாரை மாவட்டத்தில் ரன்பிம காணி வழங்கும் திட்டத்தின் ஊடாக காணிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு வீட்டுக்கு வீடு காணி உறுதி வழங்கும் தேசிய கொள்ளைத் திட்டத்தின் ஊடாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அவர்களினால் அம்பாரை மாவட்டத்தில் காணி உறுதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் கிழக்கு மாகாண காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் இன்று வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு இருந்தன.
அரசாங்கத்தின் ரன்பிம சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணியில்லாத மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இருந்தன.
இதன்போது சம்பிரதாய ரீதியாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி அமைச்சரினால் இன்றைய தினம் திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்ற மாவட்ட மாட்ட நிகழ்வின் போதே வழங்கி வைக்கப்பட்டு இருந்தனர்.
இதன்போது அம்பாரை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேணை திருக்கோவில் பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கா பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு டி வீரசிஙங்க திலக ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.