அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அவசர தொழில் வெற்றிடங்களுக்குத் தகைமையுள்ள இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 20.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 21.01.2019 (திங்கட்கிழமை) ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர்கள்2. நோயாளர் காவுகை வண்டி (அம்பியூலன்ஸ்) சாரதிகள்
அம்பாறை மாவட்ட செயலகம் (கச்சேரி), அம்பாறை மாவட்ட தொழில் நிலையம் (Job Centre) என்பன சுகப்படுத்தும் சேவை நிறுவனத்துடன் (1990) இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த தொழில் வழங்கும் வேலைத்திட்டம் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு தினங்களிலும் அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.
எனவே அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிரந்தரமாக வதியும் தகைமையுடைய மூவினங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இச்சந்தர்ப்பத்தினைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் கீழ்வரும் ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் அவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட நிழல் பிரதிகளுடன் வருகை தருமாறும் கோரப்பட்டுள்ளது.
· பொருத்தமான கல்விச் சான்றிதழ்கள்.· தகைமையுடைய பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்கள்.· ஏனைய தொழில் சார் சான்றிதழ்கள் (இருப்பின்).· சுயவிபரக் கோவை.
இதுதொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 0771578330 அல்லது 0718291893இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.