அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.
—————————— —————————— —–
(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.சினாஸ்)
—————————— —————————— —–
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில்
கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும்
சங்கத்தின் பொதுச் செயலாளருமான எம்.ஜ.எம் அப்துல் மனாப் இன் நெறிப்படுத்தலில்
முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும்
சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் வை.கே.றஹ்மானின் தலைமையில் இன்று (2021/02/21) இடம்பெற்றது.
இவ்வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரும் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 32 கழகங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் தலைவர், செயலாளர் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இதன் போது செயலாளர் அவர்களினால் கடந்த கால கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் பொருளாளர் அவர்களால் கடந்த கால நிதியறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் கொவிட்-19 காரணமாக தடைப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் சுற்றுப் போட்டி தொடர்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது சம்பந்தமாகவும், சங்கத்தின் யாப்பில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அதனை மிக விரைவில் சீர் செய்வது எனவும், மைதானங்களில் ஏதாவது குறைகள் இருந்தால் அதையும் மிக விரைவில் சீர் செய்து தருவதாகவும் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கழகங்களை முதலாம் நிலைக்கு கொண்டு சொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.