ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையும் அத்துடன் மட்டக்களப்பு கடற்யோரங்களிலும் காற்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரையோரங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.