அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த உலக சாரணர் தினமும்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

 
அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய  சங்கம் ஒழுங்கு செய்திருந்த உலக சாரணர் தினமும்  சாரணியத்தின் தந்தை பேடன் பவல் நினைவு தினமும் இன்று காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில்   மாவட்ட சாரணிய ஆணையாளர்  எஸ்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய  சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச செயலாளருமான  எஸ்.எல்.எம்.ஹனீபா பிரதம அதிதியாகவும் , தவிசாளர் யு.எல்.எம்.ஹஸன் மற்றும் நான்கு வலயங்களையும் சேர்ந்த உதவி கல்விப்பாளர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை , சம்மாந்துறை , அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலை சாரணியர்கள் அதிகளவிலான இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திண்மக் கழிவகற்றல் தொடர்பாக இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சாரணியர்களுக்கும் பாடசாலைகளுக்கு பொறுப்பாக சமூகமளிா்ாிருந்த சாரணிய ஆசிரியர்களுக்கும்  மெசன்ஞர் ஒப் பீஸ்  அமைப்பினுடைய  மாவட்ட இணைப்பாளரும் , 
  உதவி மாவட்ட ஆணையாளருமான எம்.எப்.எம்.றிபாஸ்  சான்றிதழ்களை வழங்கி வைத்தார்

Related posts