அம்பாறை மாவட்டத்தில் ஆயுத முனைகளில் நசுக்கப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அரசியல் காணி பிரச்சினைகளில் தளத்தில் நின்று போராடியவன் என்பதையும் மக்கள் நன்கறிவர்.இதனை விடுத்து எவரிடமும் பணத்தினைப் பெற்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய தேவையில்லை என திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
தன்னைப் பணம் கொடுத்துத் தேர்தலில் போட்டியிட வைத்து இருப்பதாகச் சிலர் தெரிவித்துவருவததைக் கண்டித்து இதுதொடர்பாக அவரது இல்லத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை(28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
பணம் வழங்கி என்னை தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிலர் வங்குரோத்து அரசியல் செய்கின்றனர்.என்னை கட்சிக்குள் அறிமுக படுத்த தேவையில்லை நான் . நான் 16 ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியலில் தடம் மாறாது பயணிக்கின்றேன் . இவ்வாறான எனக்கு எந்த வேட்பாளரும் முதலீடு செய்து நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை எனக்கு இல்லை .
என்னை விலை கொடுத்து வாங்குவதற்கு அன்று எவராலும் முடியவில்லை . நான் பணத்திற்கோ, சலுகைகளுக்கோ சோரம்போகாதவன்.அவ்வாறு சோரம் போய் இருந்தால் நான் இன்று வசதியாக இருந்திருப்பேன்.அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வசதிபடைத்தவனாக இருந்தேன்.இன்று பல கஸ்டத்தின் மத்தியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.இச்
என்னை தேர்தலில் போட்டியிட வைத்தது நான் தான் செலவுகளையும் நானே செய்கிறேன் என்று சிறு பிள்ளை தனமாக இரகசியமாக மக்களிடம் கூட்டம் முடிந்தவுடன் கூறுவதாக பல இடங்களிலும் இருந்து மக்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் தெரிவித்து வருகின்றனர். இதிலிருந்து ஒன்று புலனாகின்றது. தங்களின் அரசியல் காய் நகர்த்தலுக்காக என்னை பலிக்கடாவாக்குவதனை நிறுத்தவேண்டும் என்னை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அந்த மக்களின் புரிதலுக்கு அரசியல் முதலீடு தேவை அற்ற ஒரு விடயம்.
எனது பெயரை வைத்து வாக்கு கேட்கும் உங்கள் மீது மக்கள் வைத்துள்ள வெறுப்பை என்னை வைத்து சமாளிக்க முற்படுகிறீர்களா? எனது தமிழ் தேசிய அரசியல் தொழிலுக்கோ உழைப்புக்கானதல்ல.எனது மக்களின் இருப்பிற்கானது இதற்காக நான் இழந்தது ஏராளம் .அம்பாறை மாவட்டத்தில் ஆயுத முனைகளில் நசுக்கப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அரசியல் காணி பிரச்சினைகளில் தளத்தில் நின்று போராடியவன் என்பதையும் மக்கள் நன்கறிவர்.என்பதனை உணராது மற்றவர்களை வைத்து தங்களது செல்வாக்கைத் தேடவேண்டாம் என்றார்.