ஆற்றுப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

 
 
(ஷமி மண்டூர்)
 
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டமுனைக்காடு கிழக்கு  ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (8) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை சசிக்குமார் 44 வயதுடையவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரின் தாயாருடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாத நிலையில் அவரை தேட ஆரம்பித்ததாகவும் பின்னர் அவரின் உறவினர்கள் அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் சடலம் பொதுமக்கள் மீனவர்களின் உதவியுடன் பல கஷ்ரங்களுக்கு மத்தியில் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டது.
 
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts