ஆளுமையுள்ள,அரசியல் சாணாக்கியமுள்ளவர்களை இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் நூறுவீதம் வாக்களித்து அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பி எம் சமூகத்தின் உரிமை சார்ந்த அபிவிருத்தியை முன்னெடுப்போம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் பொறியியலாளர் குழந்தைவேல்-சிவாகரன் தெரிவித்தார்.
மகிழுர் கிராமத்தில் புன்கிழமை(24)நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இலங்கையில் நான் தமிழ் குடிமகனாக இருந்துகொண்டு தமிழ்மக்கள் படுகின்ற துன்பங்களை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா வாழமுடியாது.கடந்த யுத்தத்தினால் தமிழ்மக்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்தார்கள்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகள்,பொருளாதாரம்,
நான் அரசியலில் இறங்கனும்,அதில் உழைக்கனும் என்பதில் எனக்கு துளியளவும் விரும்பமில்லை.நான் அரசியலுக்குள் இறங்கனும் என்பதில் விருப்பமில்லை.கடந்த முப்பது வருட காலத்தில் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்தலைமைகளால் தமிழ்மக்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை எமது சமூகத்தில் உள்ள படித்தவர்கள்,புத்திஜீவிகள்,பொ
இன்று பார்த்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலைமையை பார்த்தால் கவலை அளிக்கின்றது.கிழக்கு தமிழர்களுக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சாணாக்கியம் இல்லாமல் கிழக்குத்தமிழர்கள் பல வேதனையை அனுபவித்து வருகின்றார்கள்.தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு பலமுள்ள அரசியல் அதிகாரம் இன்று தமிழ்மக்களுக்கு இல்லை.இதனால் கிழக்குத் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போயுள்ளது.இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ்தேசிய தலைமைகள் ஏற்றுக்கொள்ளனும்.தமிழ்மக்களி
கிழக்குத் தமிழ்மக்களுக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய உரிமை சார்ந்த அபிவிருத்தியை கிழக்குத்தமிழர் ஒன்றியம் உத்வேகத்துடன் முன்னெடுப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியில் படித்த புத்திஜீவிகளை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.கிழக்கிலே தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிட்டது.தமிழ்
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை,விவசாயம்,மீன்பி
மட்டக்களப்பில் பெண்கள் தலைமை தாங்கும் 30,000 மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர வருமானம் இல்லாமல் பல அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.இவர்களுக்கு நிரந்தரமான தொழில்பேட்டைகளை அமைத்து அவர்களுக்குரித்தான தொழிலை ஊக்குவித்து நிரந்தர வருமானம் பெறுவதற்கு வழிசமைப்போம்.அதேபோன்று மாவட்டத்தில் சிறுகைத்தொழில் செய்பவர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய தொழில்திறன்களை வழங்கி அதிக வருமானத்தை பெறுவதற்கு கிழக்குத்தமிழர் ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் உதயசூரியனை பலப்படுத்துங்கள் எனத்தெரிவித்தார்.