யாழ்பாணத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்ட வடைப்பாடல் கடந்த வார இறுதியில் இணையத்தில் வெளியீடு செய்யப்பட்டு பல ஈழத்தமிழர்களால் சிலாகிக்கப்பட்டு வருகின்றது. நாம் அனைவரும் சிறு பிள்ளையில் விரும்பி படித்த பாட்டி வடை சுட்ட கதையின் மூலம் உவமையாக பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் நுண்ணரசியலை மிகவும் லாவகமாகவும் எளிதாகவும் விளங்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது என இணையத்தில் பலர் தமது பதிவுகளூடாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பூவன் மதீசனின் எண்ணம் ,இசை மற்றும் பாடல் வரிகளில் சுஜீத்ஜி இன் குரலில் மதீசனே ஒலிக்கலப்புகளை மேற்கொள்ள கிருஷ்ணா ஒளிமட்டுப்படுத்தலை கவனித்துள்ளார். பாடலின் ஒலிநயமும் சர்வதேச தரத்த்தில் காணப்படுகின்றமை பலரால் சுட்டி காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணொளியானது சிவராஜின் இயக்கம் சசிகரனின் படத் தொகுப்பு, பிரதீப் இன் வரைபடங்கள் மற்றும் அபிலாஷன், சயன், நிரூன், உமேஷ் ஆகியோரின் நடிப்பில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற வித்தியாசமான படைப்புகள் எம் தாயகத்திலிருந்து வெளிவரும் போது குறித்த கலைஞர்களுக்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கான ஆதரவுகளை வழங்குவதானது ஒவ்வொருவருடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பாடல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துக்களையும் பாடலின் யூ டியூப் கருத்திடலில் இட்டு அவர்களை ஊக்குவியுங்கள். https://youtu.be/agNjpQmLp64