திருமூலர் கூறிய சிவபூமியாம் இலங்கைத்திருநாட்டில் ஆடியில் இடம்பெறும் பாதயாத்திரை அருமையானது அற்புதமானது.
இவ்வாறு இந்தியாவின் சென்னையைச்சேர்ந்த சூழலியலாளர் என்.மகாலெட்சுமி கூறுகிறார்.
உகந்தையிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையை முதல்தடவையாக வேல்சாமி குழுவினருடன் இணைந்து பூர்த்திசெய்த பிற்பாடு ஆலயவளாகத்திலுள்ள அரசமரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது இக்கருத்தைத தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நான் இலங்கைக்கு 3தடவைகள் வந்துள்ளேன். இரசாயனப்பசளைப்பாவனையை முற்றாக தவிர்க்கவேண்டுமென்ற நோக்கில் பல ஆய்வுகளைச்செய்து அதனை விவசாயிகளுக்கு விழிப்புணர்வுசெய்துவருகின்றேன் .
அதன்படி கடந்த 3மாதங்களாக மட்டக்களப்பில் உள்ள ஒரு அமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கு வந்து பயிற்சிவழங்கினேன். மட்டுமாநிலம் ஓர் ஆன்மீக நாடு.
இந்தியாவில் வள்ளி திருமணம் மறக்கப்பட்டுவருகிறது. அதன் விளக்கம் கதிர்காமத்தில் கிடைக்குமென கூறப்பட்டது. பல புத்தகங்களை எழுதியுள்ளேன். இருந்தும் வள்ளி திருமணம் பற்றி தெளிவின்மை இருந்தது.
அப்போதுதான் வேல்சாமி குழுவினருடன் பாதயாத்திரையிலீடுபடவேண்டும் கதிர்காமத்திற்குச் செல்லவேண்டும் என்ற அவா எழுந்தது. அதன்படி முதல்தடவையாக 7தினங்கள் காட்டினூடாகப் பயணித்தேன்.
பாதயாத்திரை எத்துணை அருமையாகவிருந்தது.
அற்புதமானது. மாணிக்ககங்கா தீர்த்தம் அருமையானது.இப்போது வள்ளிதிருமணத்திற்கு அர்த்தம் கிடைத்துவிட்டது. இந்தியர்கள் இங்குவந்து பார்க்கவேண்டும்.
இலங்கையில் இத்துணை அற்புதமா? வியக்கிறேன்.மறுமுறையும் யாத்திரையில் முருகனருளால் பங்கேற்பேன். என்றார்.