இந்து சமய விவகார பிரதி அமைச்சராக புதியவர்?

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்து சமய விவகார பிரதி அமைச்சர் நியமனம் குறித்த சாதகமான தீர்வொன்றை ஜனாதிபதி முன்வைப்பார் என எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி செயலாளர், மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக அண்மையில் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து அமைச்சர் சுவாமிநாதன், நேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts