இன்று கல்முனையில் சர்வதேச மகளிர் தினவிழா

மணித அபிவிருத்தித் தாபனத்தின் அம்பாறை மாவட்ட சகவாழ்வுக்குழுக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் சர்வதேச மகளிர் தினவிழா, இன்று(8) கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் மகளிர் அணித்தலைவி றிலீபா தலைமையில் நடைபெறவுள்ளது.
 
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் புகழ்பெறு மற்றும் அதிதியாக மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றார். கௌரவ விசேட அதிதிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
 
மகளிர் சிறப்பு அதிதிகளாக மனிதஅபிவிருத்தித்தாபன மகளிர்விவகார இணைப்பாளர் திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ,தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்டவிரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
 
இலங்கையில் மனிதஉரிமைகள் மற்றும் சமுகசேவைகள் தொடர்பில் ஆற்றிவரும் அளப்பரிய சேவைக்காக நிகழ்வில் மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் விசேடவிருது வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்படவிருக்கிறார்.
 
சகவாழ்வுக்குழு உறுப்பினர்களின் சிறப்பான வித்தியாசமான கலைநிகழ்ச்சிகள் மேடையேறவுள்ளன என இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
 
கல்முனையில் மற்றுமொரு மகளர்தினவிழா!
 
இதேவேளை, கல்முனை வடக்கு பிரதெச செயலக மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள்  நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழா பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, கௌரவஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர் என மாதர்சங்க பிரிதிநிதி திருமதி நித்தியகைலேஸ்வரி தெரிவித்தார்.

Related posts