சம்மாந்துறை வலய தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்துவதற்கான கணிப்பீடு இன்று 31 (திங்கட்கிழமை) காலை மு.ப. 8.30 – மு.ப 11.00 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.
பகுதி 1- மு.ப 08.30 – மு.ப 09.30 (1 மணி) பகுதி 11- மு.ப 09.45 – மு.ப 11.00 (1 மணி 15 நிமிடம்) வரை நடைபெறும்.
தரம் 5 இல் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இக்கணிப்பீடு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி பாடசாலைகளிலேயே சமூக இடைவெளியினைப் பேணி கணிப்பீட்டினை நடாத்தப்படல் வேண்டும்.
பொதுப்பரீட்சையில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அமைவாக மண்டப ஒழுங்கு நேர முகாமைத்துவம்இ மேற்பார்வை என்பவற்றை பின்பற்றுதல் அவசியம். இதனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிநிதிகள் இக்கணிப்பீட்டினை மேற்பார்வை செய்வர்.
அன்றைய தினம் மேற்பார்வையாளராக தரம் 5 இற்குரிய ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்களை கண்காணிப்பிலீடுபட அனுமதித்தலவசியம் எனவும் அவர் தெரிவித்த