இன்று ஜனவரி மாதம் 1ஆம் திகதி கல்பதரு தினம் ஆகும். .இராமகிருஸ்ணமிசனைப் பின்பற்றுகின்றவர்கள் அனுஸ்டிக்கின்ற தினமாகும்.
மட்டு.இராமகிருஸ்ணமிசனில் இன்று(1) கல்பதரு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று காலை 8மணிக்கு கல்லடி ஆச்சிரா உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் ஜீயின் பஜனையும் சிற்றுரையும் தொடர்ந்து9.45மணியளவில் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீயின் கல்பதரு பிரதான உரையும் இடம்பெறவிருக்கின்றன.
கல்பதரு தினம் என்பது இந்து மதத்தின் ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ராமகிருஷ்ணா மிஷனைப் பின்பற்றுபவர்கள் மற்றும் உலகளாவிய வேதாந்த சங்கங்களால் அனுசரிக்கப்படும் வருடாந்த மத விழாவாகும் .
இந்த அமைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இந்திய ஆன்மீகவாதியும் இந்து மறுமலர்ச்சியின் நபருமான ராமகிருஷ்ணாவின் போதனைகளைப் பின்பற்றுகின்றன .
1886 ஜனவரி நாள் அவதாரமெடுத்து பூமியில் வாழ்வாங்குவாழ்ந்து சேவைக்கு இலக்கணமானார்.
இது ஒவ்வொரு ஜனவரி 1 ம் தேதி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.