இன்று திருவள்ளுவரின் திருவுருச்சிலை ரதபவனி ஆரம்பம்! யாழ்.மண்ணிலிருந்து சிலை நேற்று காரைதீவுக்கு வந்தது.

காரைதீவில் எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளியன்று நிறுவப்படவிருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவச்சிலை இரண்டுநாள் ரதபவனி  இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
காரைதீவு கண்ணகை அம்மன்ஆலய முன்றலில் ஆரம்பமாகும் இச்சிலை ரத பவனி கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி வீரமுனை கோரக்கர் கோயில் வரை சென்று திரும்பவுள்ளது.
 
நாளை(26) புதன்கிழமை காரைதீவிலிருந்து பாடசாலைகளுக்குச்சென்று  புறப்படும்ரதபவனி அட்டப்பள்ளம் ஆலையடிவேம்பு தம்பிலுவில் திருக்கோவில் வரை சென்று மீண்டும் காரைதீவை வந்தடையவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சிலைநிறுவும் குழுச்செயலாளரும் ரதபவனிப் பொறுப்பாளருமான கு.ஜெயராஜி தலைமையிலான குழுவினர்  மேற்கொண்டுவருகின்றனர்.
வெள்ளியன்று (28) காரைதீவு பிரதேசசபைமுன்றலில் இச்சிலை நிறுவப்பட்டு தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
யாழ்.மண்ணிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலை நேற்றுதிங்கள்ட்கிழமை (24) காலை  காரைதீவை வந்தடைந்தது
இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக பல கலை நிகழ்வுகளும் 21 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்றது இறுதித்தினமாகிய நேற்றுமுன்தினம்(23)  ஐந்து முப்பது மணி அளவில் உத்தியோகபூர்வமாக தமிழ்நாட்டு தமிழ் தாய் அறக்கட்டளை அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட தமிழ் நாடு மலேசியா அவுஸ்திரேலியா லண்டன் பிரான்ஸ் பல நாடுகளிலும் இருந்து வருகை தந்தவர்களின் முன்னிலையில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் வாசலில் வைத்து காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வடமாகாண ஆளுனரின் செயலாளர்   கே.சத்தியசீலன் அவர்களினால் உடையாா் கோயில் குணா மற்றும் இந்தியப் பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மு.காண்டீபன் த.மோகனதாஸ் பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமாா் உட்பட சிலை நிறுவும் குழுவினர் அனைவரும் அங்கு சமூகமளித்திருந்தார்.
 
இரவு யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து காரைதீவு கண்ணகி அம்மன்ஆலயத்தை வந்த அடைந்திருக்கின்றது.
 இதை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையினை வைத்து வாகனப் பேரணி செய்வதற்கு ஏற்பாடுகளை சிலை நிறுவும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts