மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் 20இலட்சம் கிலோ டூபாய் சுரக்காய் அறுவடை.பின்தங்கிய கிராமமக்களின் துயரை துடைப்பதற்கு அரசாங்கம் கரிசனை.எஸ்.வியாழந்திரன் தெரிவிப்பு.
அரசாங்கத்தின் சுபீட்சமிக்க கொள்கை பிரகடனத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பங்களிப்புடன் வாகரை பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் “விவசாய நவீனமயமாக்கல்” வேலைத்திட்டத்தினால் செய்கை பண்ணப்பட்ட “டூபாய் சுரக்காய் அறுவடை செய்யும் நிகழ்வு பின்தங்கிய,கிராம அபிவிருத்தி,மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு,சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்ர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் வாகரை பிரதேச விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பால்சேனை நாகபுரத்தில் புதன்கிழமை (25)மாலை நடைபெற்றது.
இதன்போது இராஜாங்க அமைச்சர்,மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து டூபாய் சுரக்காயை அறுவடை செய்தார்கள்.200 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட குறித்த சுரக்காய் செய்கையானது ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ(10,000kg)டூபாய் சுரக்காய் அறுவடை கிடைத்துள்ளது.வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட 200 ஏக்கருக்கு இருபது இலட்சம் கிலோ(2000000kg)அறுவடை கிடைத்துள்ளது.இவ் சுரக்காய் செய்கையானது சுமார் இரண்டுமாதம் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 450 விவசாயிகளுக்கு மூன்று(3)இலட்சம் வங்கிக்கடன் அடிப்படையில் மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலே டூபாய் சுரக்காய் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவிக்கையில் …எமது புதிய அரசாங்கமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பின் நோக்கில் விவசாய அமைச்சினால் நாடு பூராகவும் விவசாய நவீன மயமாக்கல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றாது.அந்த வகையில் எனது பின்தங்கிய கிராமிய பொருளாதார அமைச்சின் பாரிந்துரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டது. கோரோனோ தொற்று வேகமாக பரவிவரும் காலத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் விவசாய அமைச்சும் இணைந்து நாட்டிலே பொருளாதார திட்டமிடல்களுடன் பொருளாதாரத்தை வலுவாக்கம் செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.வா
எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பகுதியில் அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் வாழைப்பழம்,மாதுளம்பழச் செய்கையை மேற்கொண்டு யுத்தத்தினால் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்த மக்களின் துயர் துடைப்பதற்கு எனது அமைச்சும்,அரசாங்கமும் கரிசனை காட்டி முன்னின்று உழைக்கும் எனத்தெரிவித்தார்.