உள்ளத்தில் இருக்கும் இருளை அகற்றம் இலகுவான வழிபாடு திருநாவுக்கரசர் காட்டிய சரியைத் தொண்டாகும் – கலாபூஷணம் தேனூரான்
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசைதினம் அறநெறி அதிபர் தி.நாகநாதன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கவிஞர் கலாபூஷணம் தேனூரான் கலந்து கொண்;டார். அகரம் செ.துஜியந்தன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குருபூசையில் இங்கு நாவுக்கரசர் பற்றிய அறநெறி மாணவர்களின் பேச்சு, நாடகம் என்பன நடைபெற்றன.
கலாபூஷணம் தேனூரான் அங்கு பேசுகையில்
உள்ளத்தில் இருக்கும் இருளை அகற்றும் இலகுவான வழிபாடு சரியைத் தொண்டாகும்.அகச்சுத்தம், புறச்சுத்தம் இரண்டையும் தன்னுடைய வாழ்வில் உயர்ந்த பக்தியைக் காட்டியவர் திருநாவுக்கரசர். ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் புறவாழ்விலும் அகவாழ்விலும் சரியாக சுத்தமானவனாக உண்மைபேசுபவராக வாழ்ந்தால்அவனுடைய வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்
திருநாவுக்கரசு நாயனார் தனது 81 வயது வரை சமயத்திற்காக ஆற்றியதொண்டுகள் அளப்பரியது. சமணர்களால் அவருக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து தப்பித்து மிகநீண்டகாலம் பக்திநெறியினை வளர்க்கப்பாடுபட்டவர். நாயன்மார்கள் இல்லiயென்றால் சைவசமயம் எப்போதே அழிக்கப்பட்டிருக்கும்.
சூழலை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் அதன் மூலமே புறத்தையும் அகத்தையும் தூய்மையாக வைத்திருக்கலாம் என்று சொன்ன முதல் மெய்ஞானி திருநாவுக்கரசு நாயனார். நாம் பிறக்கும்போது மாயையோடுதான் பிறக்கின்றோம்.இந்த மாயையை தூய்மை இறைபக்தி மூலமே வெற்றிகொள்ளமுடியும். ஆறநெறிக்கருத்துக்கள் உள்ளத்தை பரிசுத்தமாக்குவது. ஆறநெறிக்கருத்துக்கள் இருளை அகற்றுவது. எமது உள்ளம் புனிதமாக இருந்தால் வாழ்க்கையில் நிறைவுபெறலாம்.
நாயன்மார்கள் காட்டிய பக்திநெறியில்சென்றால் இறைவனைக் காணமுடியும். பொய்பேசுவது, போகவிட்டுப்புறஞ் சொல்வது போன்ற குணங்கள் எம்மை அழித்துவிடும். இன்றைய நவீன யுகத்தில் இறைவனை அடைவதற்க்கு சிறந்த மார்க்கமாக நாவுக்கரசர் கடைப்பிடித்த சரியைத் தொண்டே சிறந்ததாகும். உள்ளத்தில் இருக்கும் இருளை இறைநாமங்களை உச்சரிப்பதன் மூலமும், ஆலயத்திற்க்குச் சென்றும், ஏழைமக்களுக்கும் தொண்டு செய்வதன் மூலம் எம்மை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இறைவனை மெய்யன்போடு வழிபட மாணவர்கள் சரியைத்தொண்டில் ஈடுபடவேண்டும். சரியைத் தொண்டு ஒழுக்கத்தையும், உயர்வையும், சிறந்த பண்பையும், உள்ளத்தின் இருளையும் அகற்றும் வல்லமை மிக்கது. திருநாவுக்கரசு நாயனாரின் வழியை பின்பற்றி நாமும் தொண்டுசெய்யவேண்டும் என்றார்.