இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி மன்ற கூட்டமானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லாதவிடத்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என பட்டிருப்பு வலய தலைவர் இ.பிரபாகரன் தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்திற்கான புதிய நிருவாக சபைக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :நாங்கள் புதிய நிருவாக சபையை தெரிவு செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தோம் அதன்போது ஆசிரியர்களினால் பல தரப்பட்ட வினாக்கள் தொடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் கூட்டமானது நடாத்த முடியாமல் நிறுத்தப்பட்டு எதிர்வரும் 09.07.2018 ஆம் திகதி நடத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்ல இதனுடன் இணைந்ததாக பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றாது ஆட்சிகுழுவை கூட்டுவதற்கு எத்தணித்தால் நாங்கள் சட்டநடவடிக்கையை நாடுவததைவிட வேறு வழியில்லை!
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் மிகவும் கூடுதலான அங்கத்துவத்தை கொண்ட ஒரு வலயமாக பட்டிருப்பு கல்வி வலயம் காணப்படுகின்றது. சுமார் 800 அங்கத்தவர்கள் இந்த வலயத்தில் உள்ளனர். எனவே இவ்வாறான கல்வி வலயத்தில் ஆசிரியர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செவிசாய்த்து தாய் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தினை ஒத்தி வைக்கவேண்டும். இல்லாத பட்சத்தில் நாங்கள் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்பதுடன் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாங்கள் முன்னெடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதனை கூறிவைக்க விரும்புகின்றோம்.
தபால் ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால் ஆசிரியர்களுக்கு சரியான தகவல்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் சில வலயங்களில் ஆசிரியர்களுக்கு அறிவிக்காமல் தாங்கள் நினைத்தாற் போல் தங்களுக்கு தேவையானர்களை நிருவாகத்திற்குள் உள்வாங்கி கூட்டம் நடாத்தியதாக விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
அனைத்துவலயங்களும் இதில் கவனமாக இருக்கவேண்டும். எம்மிடம் இருந்து அறவிடப்படும் பணத்திற்கு கணக்கறிக்கைகள் காட்டப்படுகின்றதா? அல்லது எமது நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்படுகின்றதா? என்பதனைப்பற்றி அனைத்து ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும் எமது பட்டிருப்பு கல்வி வலயத்தில் மாத்திரம் பல இலட்சம் ரூபாய்க்கள் அங்கத்துவ பணமாக வலயக்கல்லி பணிமனையால் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு என்ன நடந்ததென்று இதவரை தெரியவில்லை.
ஆசிரியர் அல்லாத கோட்டக்கல்வி பணிப்பாளர்களும் அங்கத்துவம் பெற்று பெரிய பதவிகளில் இருந்து சங்கத்தை குழப்புகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். மற்றும் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் முன்னாள் பொருளார் நிருவாகச்செயலாளரிடம் ஒப்படைத்த நான்கு இலட்சம் ரூபாய் பணத்திற்கு என்ன நடந்ததென்று தெரியிவில்லை. அதற்கான கணக்கறிக்கையும் வழங்கப்படவேண்டும். முற்றும் தாய்சங்கத்தில் இயங்கிவரும் பொருளாளருக்கு தெரியாமலே வங்கிகளில் பலலெட்சம் ரூபாய் பணம் கையாளப்பட்டுள்ளது. தலைவர், செயலாளர், பொருளார் ஆகியோரின் கையொப்பத்துடன் தான் பணங்கள் கையாளப்பட வேண்டும் முக்கியமாக பொருளாளரின் கையொப்பம் இருக்க வேண்டும் ஆனால் செயலாளர் தன்னிச்சையாக சங்கத்தில் இல்லாத ஒருவரை பொருளாராக வைத்து பணத்தினை செலவு செய்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் போலி பொருளாளர் ஒருவரைக் கொண்டுவந்து கணக்கறிக்கை வாசித்துள்ளார். இதனை நான் நேரடியா விமர்சித்தேன் இதுதான் சங்கத்தின் போக்காக இருந்து கொண்டு இருக்கின்றது. இத்தனையையும் பொதுச் செயலாளர் தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றார் தலைவர் சங்கத்தில் பொம்மை போன்று இருக்கின்றார்.
செயலாளர் சங்கத்தில் அங்கத்துவம் பெறமுடியாத ஆசிரியர்காலசாலை விரிவுரையாளராக இருக்கின்றார். இது யாப்பு விதிக்கு முரணானது. இவர் சங்கத்தின் அனுமதியின்றி இரண்டு மாகாணங்களிலும் தேர்தலில் இறங்கி பிரிவினையை உண்டுபண்ணும் வகையில் செயற்பட்டும் வருகின்றார் ஆகவே அன்பார்ந்த ஆசிரியர்களே தமிழருக்கென்று வடக்கு கிழக்கை இணைக்கின்ற அமைப்பாக காணப்படும் ஒரே ஒரு சங்கம் தமிழர் ஆசிரியர் சங்கம்மாகும் இதனை மீட்டெடுப்பது எமது தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார்.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்...
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்....
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...