இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 62வது பேராளர் மாநாடு 2019 ஆனி 28 (வெள்ளிக்கிழமை) குருநாகல் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தலைவர் தோழர் பிரியந்த பெர்ணான்டோ தலைலையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நாடு தழுவிய மாவட்ட தலைவர்கள்இ மாவட்ட செயலாளர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெயரூபன் அவர்கள் சம கால வட-கிழக்கு அரசியல் பொருளாதார கலாச்சார உரிமை தொடாபாகவும் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றியும் தனது பேச்சில் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் சட்டத்திற்கு முரணான ஆசிரியர் இடமாற்றங்கள்இ அதிபர் நியமிப்புக்கள்இ சேவை பிரமாண குறிப்பின் திருத்தத்தினை கருத்தில் கொள்ளாத ஆசிரியர் ஆலோசகர் விண்ணப்பஙகள்;கோரப்பட்டமை தொடர்பாக தமது கடுமையான கண்டணத்தை தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் நிலத்தொடர்பற்ற கல்வி வலயங்கள்இ புதிதாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இன ரீதியான கல்வி வலயங்கள் மற்றும் அசியல்வாதிகளின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பாகவும் கல்விக் கொள்கையின் கல்விச் சேவை ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு முரணான செயற்பாடாக கருதுவதாவும் பேராளர் மாநாட்டில் குற்றம சாட்;டினார்.
இம்மாநாட்டில் பிரேரணைகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு புதிய தலைவராக தோழர் பிரியந்த பெர்ணான்டோஇ பொதுச் செயலாளராக தோழர் ஜோசப் ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.