இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தினை வழங்குவதற்கான அனுமதியினை கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இந்த உத்தியோகபூர்வ நியமனக்கடிதத்தினை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதிஉத்தீன் ஆகியோர் அவரின் அமைச்சின் அலுவலகத்தில் வைத்து நேற்று வழங்கிவைத்துள்ளார்
இவரின் இந்ந நியமனம் பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது
தனக்கு கிடைத்திருக்கும் இந்த நியமனத்தினால் மிக நீண்டகாலமாக மட்டக்களபு மாவட்டத்தில் செயற்படாமல் இருக்கும் வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனத்தினை மீண்டும் இயங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வேலையற்று இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கு இந்த தொழிச்சாலையில் வேலைவாய்பினை பெற்றுக்கொடுப்பதும் தனது நோக்கம் எனத்தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக முதல் முறை ஒரு தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.