இளம் சமூக தொழில் முனைவோர், புதிய உற்பத்தி மற்றும் சக வாழ்வை ஏற்படுத்த முனைவோரை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு!!

இளம் சமூக தொழில் முனைவோர், புதிய உற்பத்தி மற்றும் சக வாழ்வை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் ஊடாக 
கிழக்கு மாகாணத்தில் இளம் சமூக தொழில் முனைவேராக தேர்வுசெய்யப்பட்ட 11 குழுக்களை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு இன்று 08.11.2021 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
 
சர்வேதயம் சாந்திசேனா அமைப்பும், UNDP யும் இணைந்து முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஊடாக இளம் சமூகத்தினரை வளப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 11 இளம் குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் முயற்சிகளுக்கான உதவித்தொகை இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
 
பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக UNDP நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் கலாநிதி பிரியன் செனவிரட்ண, சர்வோதயம் அமைப்பின் தலைவர் கலாநிதி வின்ய ஆரியரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பீ.சசிகுமார் மற்றும் சர்வோதயத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
 
அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அதிதிகளின் விசேட உரையினைத் தொடர்ந்து இளம் தொழில் முனைவோர் குழுக்களுக்கு பாராட்டி ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இளம் தொழில் முனைவோரின் அனுபவப்பகிர்வுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
 

Related posts