உயர்தர மாணவர்களுக்கு டெப் கணனி பெற்றுக்கொடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சித் திட்டமொன்று செயல்படுத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட திட்டம் உயர்தர மாணவர்களை இலக்காகக் கொண்டு 1ஏபி, வகையான பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 1ஏபி பாடசாலைகளில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டு பரீட்சார்த்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு அதன் முன்னேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட திட்டத்தை நாடு முழுவதுமுள்ள உயர்தர வகுப்பு மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெப் கணனி வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து திட்டங்கள் மற்றும் பரீட்சை திட்டங்களை செயற்படுத்தும் விதம் குறித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.