உயர் தரப்பரீட்சையில் தோற்றிய மாணவனிடம் கையடக்க தொலைபேசி
கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது.
நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது.
எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.