உரமானியத்தை சீராகவினியோகிக்க மட்டக்களப்பில் உரச் செயலகம் துரிதநடவடிக்கை

விவசாயிகளுக்குஅரசின் உரமானியத்தை சீராகவினியோகிக்க மட்டக்களப்பில் உரச் செயலகம் துரிதநடவடிக்கை
 
புதிய அரசாங்கத்தின் உரமானியகொள்கைதிட்டத்திற்கமையமட்டக்களப்புமாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறுபோகபயிர்ச் செய்கையின் போதுபயன்படுத்தவிருக்கும் மானியஉதவியிலான உரவினியோக இலக்கினைபரிசீலிக்கும் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம் தேசிய உரச் செயலகத்தின் செயற்பாட்டில் மாவட்டசெயலககேட்போர் கூடத்தில்  (12)நடைபெற்றது.
 
மட்டக்களப்புமாவட்டஅரசாங்கஅதிபர்திருமதிகலாமதிபத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்தஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்புமாவட்டஉதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜீன்,கமநலசேவைகளின் பிரதிப் பணிப்பாளர் கே. ஜகனாத்,விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்புபணிப்பாளர் வை.பி. இக்பால்,மட்டக்களப்புவிவசாயவிரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பேரின்ப ராஜா,விவசாயகாப்புறுதிசேவையின் பணிப்பாளர் கே. பாஸ்கரன் உட்படஅரசதிணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கமநலஅமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் இவ் வருடசிறுபோகத்தில் பெரும் நீர்ப் பாசனத்தின் கீழ் நெற்செய்கைபண்ணப் படவுள்ள 25 ஆயிரத்துஎந்நூற்றுஎழுபத்தெட்டுஹெக்டெயரிலும்,சிறியநீர்ப்பாசத்தின் கீழ் எட்டாயிரத்துமுந்நூற்றுஎண்பத்துநான்குஹெக்டெயரிலும் செய்கைபண்ணப்படவுள்ள நெற் செய்கைக்குதேசிய உரச் செயலகத்தினூடாக உர மானியத்தைகோருவதெனதீர்மானிக்கப்பட்டது.
இது தவிர உப உணவுப் பயிர்களானமிளகாய்,வெங்காயம்,உருளைக் கிழங்கு,சோளம்,கௌப்பி,பயறுவகைகளைஎதிரகாலத்தில்செய்கைபண்ணுவதுஎனவும் அதற்கானமானியஉரத்தைதேசிய உரச் செயலகத்தில் பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
மேலும் இந்தஒருங்கிணைப்பு கூட்டத்தில் மட்டக்களப்புமாவட்டத்தில்மானிய உர வினியோகத்தைமேலும் இலகுபடுத்துவதற்குஎடுக்கப்படவேண்டியமேலதிகநடவடிக்கைகள் பற்றியும் ஏனைய விவசாயிகளின் தேவைகள் பற்றியும்இங்குஆராயப்பட்டுஎடுக்கப்படவேண்டியநடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
வழமைபோல ஏனைய மாவட்டங்களுக்குமுன்பாகமட்டக்களப்புமாவட்டத்தில் நெல் விதைப்புமேற் கொள்ளப்படுவதனால் வழமைபோன்றுமானியஉரத்தைமுன் கூட்டியேஉரியகாலத்தினுள் விவசாயிகளுக்குபெற்றுக் கொடுப்பதற்குஏற்பாடுகளைசெய்வதாகவும் இதனடிப்படையில் தேவையான இலக்கினைக் கொண்டமானிய உர உத்தேசஅறிக்கையைவிரைவாகதேசிய உரச் செயலகத்திற்குசமர்ப்பிப்பதுஎனவும் தீர்மானிக்கப்பட்டது.
இங்குஅரசாங்கஅதிபர் கலாமதிபத்மராஜா கருத்துதெரிவிக்கையில் சிறுபோகநெற்செய்கையின் போதுவினைத்திறனானநீர்ப்பாசனத்தைப் பாவிப்பதென்றும் மேட்டுநிலக் காணிகளில் நெல் உற்பத்திக்குமேலதிகமாகமேட்டுநிலப் பயிர்களைபயிரிடுவதன் மூலம் வினைத்திறனுள்ளநீர்ப்பாசனத்தைபெற்றுக் கொள்வதென்றும் கூடுதலானகாணிகளைபயிர்ச் செய்கைகளில் ஈடுபடுமாறும் அரசாங்கஅதிபர் விவசாயபிரதிநிதிகளுக்குவேண்டுகோள் விடுத்தார்.
 
2019 சிறுபோகத்தில் 18 ஆயிரத்து இருநூற்றுதொன்னூற்று மூன்றுவிவசாயிகளுக்கு 23 098 ஹெக்டெயர் நெல் வயல் களுக்கு மானியஉரம் வழங்கப்பட்டுள்ளதாக இக் கூட்டத்தில் தேசிய உரச் செயலகஉதவிப் பணிப்பாளரினால்அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது.

Related posts