உரவிநியோகத்தினை உரிய காலத்தில் வழங்க அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான உரவிநியோகம் உரிய நேரத்திற்கு வழங்கப்படுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
 
உரஉற்பத்தி மற்றும் வழங்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்களான மகேஸ் கம்பன்பில, சுனில் கலுகம மற்றும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் ஜெ.ஏ.டீ. ரொசான் ஆகியோருக்கிடையலான சந்திப்பொன்று அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் இன்று (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 
 
 
இதன்போது தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்புச் செய்யும் பெரும்போகம் மற்றும் காலபோக விவசாய பயிர்ச்செய்கைகள் ஏனைய மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் முதலில் செய்கைபண்ணப்படுகின்றன. இப்பயிர் செய்கைக்கான உரவிநியோகம் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதுபோல் இம்மாவட்டத்திற்கு வழங்கப்படுவதனால் உரிய காலத்திற்கு உரம் கிடைக்காமையினால் விவசாயிகள் பரிதும் சவால்களை எதிர்நோக்கி வந்தனர். 
 
 
இதற்கமைவாக இச்சந்திப்பின்போது உரிய காலத்தில் உரவிநியோகத்தினைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இம்மாவட்ட விவசாயிகள் உரத்தினைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதனூடாக இம்முறை சிறுபோகத்திற்கான உரவிநியோகம் சீராகவழங்கக்கூடியதாக இருக்கும் என நம்பப்படுவதாக மாவட்ட உரச்செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூதீன் தெரிவித்தார். 
 
 
இச்சந்திப்பின்போது மாவட்ட உரச்செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூதீன், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத், விவசாயவிரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா ஆகியோர் கலந்து கொண்டனர்
????????????????????????????????????

Related posts