உலக ஓவியர் பத்மவாசன் பட்டிருப்பு வலய உயர்தர சித்திரபாட மாணவர்களுக்கு பயிற்சி!

இலங்கை வந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு. பத்மவாசன் பட்டிருப்பு வலய உயர்தர சித்திரபாட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வரைதல் பயிற்சி பட்டறையை நேற்று முன்தினம் நடாத்தினார்.
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்திருக்கும்  உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 2022 உயர்தர கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றும் சித்திரக்கலையை ஒருபாடமாக கற்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பிக்கும்  ஆசிரியர்களுக்கும்                ” ஓவியங்கள் வரைதல் ” என்னும் தொனிப்பொருளில் இப் பட்டறையை நடாத்தினார்.
 
பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார்  தலைமையில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல்  இடம் பெற்றது. 
 
இந்நிகழ்வில் அழகியல் பாடங்களுக்குரிய உதவிக்கல்விப் பணிப்பாளர் .க. சுந்தரலிங்கம் , சித்திரக்கலை பாடத்திற்குரிய ஆசிரிய ஆலோசகர் அ.ஜெயவரதராஜன் , சித்திரகலை பாட ஆசிரிய வளவாளர் பு. ஸ்ரீகாந்  ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
 
அதேவேளை இப் பட்டறையில்
 மட்/பட்டிருப்பு ம.ம. வி (தே.பா), மட்/ களுதாவளை ம. வி(தே.பா ), மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி, மட்/ தேற்றாத்தீவு ம.வி, மட்/ ஓந்தாச்சிமடம் விநாயகர் ம .வி, மட்/ கோட்டைக்கல்லாறு ம.வி, மட்/ துறைநீலாவணை ம.வி, மட்/ பெரியபோரதீவு பாரதி ம.வி, மட்/ பழுகாமம் கண்டுமணி ம.வி, மட்/ மண்டூர் 13 விக்னேஸ்வரா ம.வி, மட்/ மண்டூர் 14 சக்தி ம.வி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் , ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 
 
அம்பாரை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ முன்னதாக உலக ஓவியர் மு. பத்மவாசன் தொடர்பான அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏழில்வாணி பத்மகுமார் நன்றி உரையினை நிகழ்த்தினார்

Related posts