உலக சாரணர் தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

(க.விஜயரெத்தினம்)

சர்வதேச சாரணர் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை(22)காலை மட்டக்களப்பில் நடைபெற்றன.
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபு அவர்களின் பிறந்த தினத்தை சரணர்கள் உலக சாரணர் தினமாக அனுஸ்டிக்கினறனர்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதான நிகழ்வு திருநீற்றுப்புங்காவில் உள்ள பேடன் பவல் சிலையருகே சிறப்பாக  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும்,மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சாரணிய கொடிகள்,தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பேடன் பவலின் சிலைக்கு அதிதிகளினால் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உலக சாரணர் தினத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்றுகளும் பூங்காவில் நடப்பட்டன.இந்த நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன்,கிழக்கு மாகாண பெண்கள் சாரணிய ஆணையாளர் திருமதி காயத்திரி நகுலன் உட்பட பிரதி ஆணையாளர்கள்,சாரணிய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts