வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா (19) பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சோழ இளவரசி சீர்பாத தேவியினால் உருவாக்கப்பட்டு சீர்பாகுலம் வகுக்கப்பட்ட வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது.
சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி பிரம்மஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது. 19 பிற்பகல் பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று யானைகள் புடைசூழ ஊர்வலமாக வந்த பஞ்சமுக கணபதி தேரில் ஆரோகனம் செய்த காட்சி அனைவரையும் மெய்சிலிக்கவைத்தது.
பூமாரி பொழிய உலங்கு வானுர்தியிலும் பூ மழை பொழிய இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் உள்ள சீர்பாத மக்கள் உட்பட அனைவரையும் கவர்ந்திழுக்கும் வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப் பிள்ளையாரின் மஹோற்சவத்தில் நாளை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
இன்றைய தேர் உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.