அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி அக்கரைப்பற்று மாநகர சபைக்கு ஆணையாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.ரீ.எம்.றாபி அவர்களுக்கு அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிட தொகுதி மண்டபத்தில் 23 இடம்பெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.ரீ.எம்.றாபி அவர்களின் சேவையினை பாராட்டி செயலாளர்களினால் கௌரவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக புதன்கிழமை பதியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது