ஊடகவியலாளர் பழிவாங்கப்பட்ட சம்பவத்திற்கான விசாரணையினை நடத்தி சம்பந்தப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

ஊடகவியலாளர் பழிவாங்கப்பட்ட சம்பவத்திற்கான விசாரணையினை நீதியாான முறையில் நடத்தி சம்பந்தப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் கல்முனைப் பிராந்தியப் பணிப்பாளரைக் கேட்டுள்ளது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் மீரா இஸ்ஸடீன் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணனுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலையத்திற்கு உரிய நேரத்திற்கு குழந்தைகளுக்கான ஊசி, மருந்துகள் வராமல் கைக்குழந்தைகளுடன் இருக்கைகள் இன்றி கொரோனா பரவும் அச்சம் உள்ள இக்காலப்பகுதியில் காலை 11.30 மணிவரை தாய்மார்கள் காத்திருந்தமையினை கல்மு னப் பிராந்திய தாய், சேய் பிராந்திய வைத்திய அதிகாரி எம்.எச்.பஸாலுக்கு அறிவித்தமையை அடுத்து அன்றைய தினம்(16.11.2020) ஊசிகள் வரவழைக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஏற்றப்பட்டுள்ளன
 
குறித்த நிலையத்தின் பொறுப்பாளராக கல்முன தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கு மேலதிகாரியினால் விடுக்கப்பட்ட கட்டளையினை சகித்துக் கொள்ள முடியாத வைத்திய அதிகாரி மறுநாள்(17.11.2020) வேறு பிரதேசங்களில் கடமையில் இருந்த பொதுச் சுகாதார அதிகாரிகளைக் கொண்ட 12 பேர் அடங்கிய குழுவொன்றை அழைத்து வந்து ஊடகவியலாளின் வீட்டில் மாத்திரம் சுகாதாரக் குறைபாடு வேட்டை நடத்தியுள்ளார்.
 
அழைத்து வந்த கள செயற்பாட்டாளர்கள் திருப்தியடைந்து ஊடகவியலாளரின் வெளியேற எத்தனித்த போது ஊடகவியலாளரின் வீட்டுக்குள் நுழைந்த வைத்திய அதிகாரி ஊடகவியலாளரையும் ஊடகத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்
 
குறைபாட்டினை சுட்டிக்காட்டிய மறுநாளே ஊடகவியலாளரின் வீட்டுக்கு தரிசித்தமை, டெங்கு தொடர்பான எவ்வித பாதிப்புக்களும் இல்லாத அவரது வீட்டுக்கு வந்து ஊடகவியலாளரை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியமை, தொடராகப் பாவிக்கின்ற ஆறு மீன்கள் விடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இறந்த குடம்பி இருப்பதாகக் கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்த எத்தனித்தமை, வேறு பிரதேசங்களில் இருந்த சுகாதாரப் பரிசோதகர்களை பழிவாங்கும் நோக்கில் அழைத்து வந்தமை, அறிவுறுத்தல் ஏட்டைப் பிழையாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு எதிராக முறைப்பாடு செய்யபபட்டுள்ளது
 
ஊடகவியலாளரால் வழங்கப்பட்டுள்ள மூன்று பக்க முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு விடங்களையும் ஆராய்வதுடன் இதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் விசாரணை செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
 
பொதுச் சுகாதார அதிகாரி திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளமை சம்பவங்களின் மூலம் சாதாரண மக்களாலும் அனுமானிக்கக் கூடியதாக உள்ளது
 
தமது உயிரையும் துச்சமாக மதித்து சுகாதாரத்துறையினருடன் இணைந்து செயற்படும் ஊடகவியலாளர்களைப் பழிவாங்க எடுக்கும் இவ்வாறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அம்பாறை மாவட்ட.ஊடகவியலாளர் சங்கம் அவ் அறிக்கையில் கேட்டுள்ளது

Related posts